நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார்

மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார்.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 8:15 pm IST

மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார். அவருக்கு வயது 80.

நடிகை கவியூர் பொன்னம்மா 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகர்களான மோகன்லால், நசீர் மற்றும் மம்மூட்டி உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாக அவர் நடித்துள்ளார்.

மேலும் நான்கு முறை கேரள அரசின் மாநில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார்.

கவியூர் பொன்னம்மாவின் மறைவு மலையாள திரையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மலையாள நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ், பொன்னம்மாவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து, திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்துள்ளார். மறைந்த பொன்னம்மாவுக்கு பிந்து என்கிற மகள் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.