பழம்பெரும் பாலிவுட் நடிகர் சுதேஷ் குமார் உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார்.
'சரங்கா' எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட மூத்த நடிகரான சுதேஷ் குமார், தனது 95வது வயதில் மூளை பக்கவாதம் ஏற்பட்ட உடன், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மே 1ஆம் தேதி காலமானார்.
நடிகர் சுதேஷ் குமார் தனது மறைவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 20ஆம் தேதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், ஏப்ரல் 30 வரை அங்கேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
பிரித்விராஜ் கபூரின் புகழ்பெற்ற நாடகக் குழுவின் வாயிலாகவே, அவர் தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார். 1931ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி பிறந்த சுதேஷ் குமார், அறிவியலில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். மருத்துவராக வேண்டும் என்பதே அவரது தந்தையின் விருப்பமாக இருந்தது. இருப்பினும், நடிப்புத் துறையின் மீது அவருக்கு இருந்த தீராத ஆர்வம், அவரைத் திரையுலகை நோக்கி ஈர்த்தது.
Summary
Veteran actor Sudesh Kumar (95), known for his role in the romantic film Saranga, has passed away.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தும்பாட் - 2 வெளியீட்டுத் தேதி!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் பாரத் கபூர் காலமானார்

மே 2-ல் தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!
பில்லா மறுவெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை



