மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாட்னா என்ஐடி விடுதியில் மாணவி தற்கொலை!

சம்பவ இடத்தில் தற்கொலைக்கான கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 செப்டம்பர் 2024, 5:10 am

பிகார் மாநிலம் பாட்னாவின் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின்(என்.ஐ.டி) மாணவி விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த மாணவி ஆந்திரத்தைச் சேர்ந்தவர். அவர் தங்கியிருந்த விடுதி அறையின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சம்பவ இடத்தில் தற்கொலைக்கான கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு 10.15 மணியளவில் தனது விடுதி அறைக்குள் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு அழைப்பு வந்தது. போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மாணவி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து அனைத்து அறிவியல் ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு, மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை. மாணவி இறந்த தகவல் பரவியதையடுத்து, கல்லூரி வளாகத்திற்கு வெளியே ஏராளமான மாணவர்கள் திரண்டு, கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.