ஜம்மு-காஷ்மீர்: காணாமல் போனவரின் எலும்புக்கூடு கண்டெடுப்பு
ஜம்மு-காஷ்மீரில் காணாமல் போனவரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜம்மு-காஷ்மீரில் காணாமல் போனவரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், ரம்பான் பகுதியில் ஒருவர் காணாமல் போனதாக கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி படோட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காவல் துறையினரும் பொதுமக்களும் இணைந்து கடந்த 24 நாட்களாக தேடியும் அவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனிடையே காணாமல் போனவரின் உறவினர்கள், அவர் காணாமல் போன பகுதிக்கு சென்று நேற்று மாலை பார்த்துள்ளனர்.
அங்கு மண்டை ஓடு கிடந்ததுடன், சில துணிகளும் கண்டெடுக்கப்பட்டன. தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் மண்டை ஓடு, காலணிகள் மற்றும் ஆடைகளை கைப்பற்றினர். அது காணாமல் போனவர் தான் என்பதை அவர்களது உறவினர்கள் அடையாளம் காட்டினர். பயங்கரவாதிகளின் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து ரம்பான் காவல்துறையின் மூத்த கண்காணிப்பாளர் குல்பீர் சிங் கூறியதாவது, என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி மற்றும் சில ராணுவ வீரர்களும் கொல்லப்பட்ட அதே நேரத்தில் இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். விசாரணையில், எத்தனை பேர் இதில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவரும். பொதுமக்கள் கொலையில் ஈடுபட்டது இதே குழுதான்.
எங்கள் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கவில்லை, ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புப் படையினர் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...