நாட்டில் முதல் முறை: தில்லி விமான நிலையத்துக்குள் வருகிறது ரயில் சேவை!

இந்தியாவிலேயே முதல் முறையாக தில்லி விமான நிலையத்தில் விமான ரயில் சேவை கொண்டுவரப்படவிருக்கிறது.
விமான நிலையம்
விமான நிலையம்
Published on
Updated on
1 min read

இந்தியாவிலேயே முதல் முறையாக, தில்லி விமான நிலையம், தனது அனைத்து முனையங்களையும் இணைக்கும் விமான ரயில் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. திட்டமிட்டபடி பணிகள் முடிந்தால், 2027 இறுதிக்குள், தில்லி விமான நிலையம், விமான ரயில் சேவை கொண்டதாக மாறும்.

இதனால், தில்லி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையம் மற்றம் இரண்டாவது முனையமும், மற்றொரு பக்கத்தில் உள்ள முதல் முனையத்துக்கும் பயணிகள் பயணிப்பது எளிதாக மாறிவிடும்.

தில்லி சர்வதேச விமான நிலைய, இது தொடர்பான பணிகளுக்கு டெண்டர் கோரியிருக்கிறது. அதன்படி, விமான நிலையத்தின் மூன்று முனையங்கள், ஏரோ சிட்டி மற்றும் கார்கோ சிட்டி என நான்கு முதல் ஐந்து நிறுத்தங்களைக் கொண்ட விமான ரயில் சேவை அல்லது தானியங்கி நகரும் சேவை கொண்டு வரப்படும். 2027அம் ஆண்டுக்குள், ஒப்பந்தம் விடுக்கப்பட்டு பணிகள் நிறைவு செய்தால் விமான நிலையத்தின் 7.7 கிலோ மீட்டர் ஒரு விமான ரயில் சேவை மூலம் இணைக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரயில் சேவை தொடங்கிவிட்டால், தற்போது இரண்டு முனையங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வரும் பேருந்து சேவையே தேவையில்லாமல் போய்விடும்.

இது குறித்து வெளியிடப்பட்ட டெண்டரில், விமான நிலையத்தின் அனைத்து முனையங்களிலிருந்தும், மக்கள் மிக விரைவாக வெளியேறவும், உள் நுழையவும் வசதியாக 7.7 கிலோ மீட்டர் விமான நிலையத்தை ஏரோசிட்டி மற்றும் கார்கோ சிட்டி வழியாக இணைக்கும் ரயில் சேவையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் இந்த சேவை இருக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி விமான நிலையம், இந்தியாவின் மிக பரபரப்பான விமான நிலையமாகும். இங்கு ஒரு ஆண்டில் சுமார் 7 கோடி பயணிகள் வந்து செல்கிறார்கள். இது அடுத்த 6-8 ஆண்டுகளில் 13 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனைப் பயணிகளும் விரைவாக விமான நிலையத்துக்குள் பயணிக்க ரயில் சேவை மட்டுமே சிறந்ததாக இருக்கும் என்று தற்போது முடிவெடுத்து, ஒப்பந்தம் கோரப்பட்டுளள்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com