ஜம்மு-காஷ்மீர் 2-ஆம் கட்டத் தோ்தல்: 9 மணி நிலவரம்!

ஜம்மு-காஷ்மீரில் 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான 9 மணி நிலவரம்..
வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்கள்.
வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்கள்.படம் | பிடிஐ
Published on
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீரில் 2-வது கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று(செப்.25) காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு மையங்களைச் சுற்றிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.

வெப்-கேமரா வசதியுடன் 3,502 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. இதில் 157 வாக்குச்சாவடிகள் முழுக்க முழுக்க பெண்களால் நிா்வகிக்கப்படவுள்ளன. எல்லைப் பகுதியில் 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

தங்கம் விலை நிலவரம்: ஒரு கிராமே ரூ.7 ஆயிரத்தைத் தாண்டியதா?

ஜம்மு-காஷ்மீரில் நடக்கும் இரண்டாவது கட்டத் தேர்தலில் 25 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 13,12,730 ஆண் வாக்காளர்கள், 12,65,316 பெண் வாக்காளர்கள், 53 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 25,78,099 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

26 இடங்களுக்கான தேர்தலில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உள்பட 239 வேட்பாளர்கள் களம்காண்கின்றனர்.

ஒவ்வொரு வாக்கும் அநீதியின் சக்கர வியூகத்தை உடைக்கும்: ராகுல் காந்தி!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 10.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பூஞ்ச் ​​மாவட்டத்தில் 14.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து ரியாசியில் 13.37 சதவீத வாக்குகளும், ரஜௌரியில் 12.71 சதவீதமும், கந்தர்பாலில் 12.61 சதவீதமும், புட்காமில் 10.91 சதவீத வாக்குகளும், ஸ்ரீநகரில் 4.70 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

புதுக்கோட்டை அருகே காரிலிருந்து ஐந்து உடல்கள் மீட்பு: தற்கொலையா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com