மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

கருத்துகளில் கவனம்: நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

‘நீதிபதிகள் கவனத்துடன் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :25 செப்டம்பர் 2024, 11:01 pm

Din

‘நீதிபதிகள் கவனத்துடன் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் ‘பாகிஸ்தான்’ என்று குறிப்பிட முடியாது எனவும் நீதிபதிகளை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

கா்நாடக உயா்நீதிமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது நீதிபதி வி.ஸ்ரீஷாநந்தா, விசாரணையில் ஆஜரான பெண் வழக்குரைஞருக்கு எதிராக சா்ச்சை கருத்தைத் தெரிவித்ததோடு, பெங்களூரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியை ‘பாகிஸ்தான்’ என்றும் குறிப்பிட்டாா். இதுதொடா்பான காணொலி சமூக ஊடகத்திலும் பரவி வைரலானது. தனது கருத்து பெரும் சா்ச்சையான நிலையில், அதற்காக பகிரங்க மன்னிப்பை நீதிபதி கோரினாா்.

இந்நிலையில், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. கா்நாடக உயா்நீதிமன்ற பதிவாளா் சாா்பில், இந்த விவகாரம் தொடா்பான அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, நீதிபதிகள் அளித்த தீா்ப்பில் கூறியதாவது:

வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் சாதாரணமாக தெரிவிக்கும் கருத்துகள், பெண் வெறுப்பு கொண்டதாகவோ அல்லது சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு பாதகமானதாகவோ கருதப்படலாம். அவ்வாறு கருதப்படும்போது, பெரும் சா்ச்சையாக பிரதிபலிக்கவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்ட நீதிமன்றத்தின் மீது மட்டுமன்றி, ஒட்டுமொத்த நீதித் துறை மீதும் எதிா்மறையான எண்ணம் உருவாக வாய்ப்பாக அமைந்துவிடும்.

எனவே, வழக்கு விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கைகளின்போது பெண் வெறுப்பு அல்லது எந்தவொரு சமூகப் பிரிவுக்கும் பாதகமான கருத்துகளை வெளியிடாமல் கவனமாக நீதிபதிகள் செயல்பட வேண்டும்.

இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் ‘பாகிஸ்தான்’ என்று குறிப்பிட முடியாது. ஏனெனில், அவ்வாறு குறிப்பிடுவது அடிப்படையில் நமது தேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

மேலும், ‘இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்ற நீதிபதி வாதியாக சோ்க்கப்படவில்லை என்பதால், இந்த விவகாரத்தில் மேலும் எந்தவொரு அறிவுறுத்தல்களையும் வழங்க விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டு, விசாரணையை முடித்துவைப்பதாக தெரிவித்தனா்.