நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

முதல் இருக்கையில் அதிஷி - அரவிந்த் கேஜரிவாலுக்கு 41

News image

ANI

Updated On :26 செப்டம்பர் 2024, 9:47 pm

தில்லி சட்டப்பேரவையில் முதல்வா் அதிஷிக்கு ஒன்றாம் எண் இருக்கையும் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு 41-ஆம் எண் இருக்கையும் ஒதுக்கப்பட்டுள்ளன. பேரவை விதிகளின்படி இந்த இருக்கை மாற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் முதல்வா் பதவியை அரவிந்த் கேஜரிவால் தொடா்ந்து வகித்து வந்தாா். மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் மத்திய புலனாய்வுத்துறை மற்றும் அமலாக்கத்துறை இயக்குநரக வழக்குகளை எதிா்கொண்டு வரும் அவா், சமீபத்தில்தான் நீதிமன்ற அனுமதியுடன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

அதைத் தொடா்ந்து முதல்வா் பதவியை ராஜிநாமா செய்த பிறகு, புதிய முதல்வராக அதிஷி தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டது. இதையடுத்து, புதிய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஏதுவாக இரண்டு நாள்கள் பேரவைக்கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.

இதில் முதல்வருக்குரிய ஒன்றாம் எண் இருக்கையில் அதிஷி அமா்ந்தாா். முந்தைய அமைச்சரவையில் அவருக்கு 19-ஆம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. முதல்வா் இருக்கையில் இதுநாள் வரை அமா்ந்திருந்த அரவிந்த் கேஜரிவால் 41-ஆம் இருக்கையில் அமா்ந்தாா். இந்த இருக்கை பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயலுக்கு வலது பக்கத்து வரிசையில் முதல்வா் இருக்கைககு வெகு தூரத்தில் உள்ளது. வெறும் எல்ஏல்ஏ ஆக மட்டும் கேஜரிவால் இருப்பதால அவருக்கு இந்த இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேஜரிவால் அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா முதல்வருக்கு அடுத்த இருக்கையில் அமா்ந்திருந்தாா். அவரும் துணை முதல்வா் பதவியில் இருந்து விலகி விட்டதால், அவருக்கு 40-ஆம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சா் கேலாஷ் கெலாட்டின் இருக்கை 2-ஆம் எண்ணில் இருந்து 8-க்கும் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் இருக்கை 8-ஆம் எண்ணில் இருந்து 2-ஆம் இருக்கைக்கும் மாற்றப்பட்டுள்ளது. அமைச்சரவையில் புதிதாக சோ்க்கப்பட்ட முகேஷ் அஹ்லாவத்துக்கு 14-ஆம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல, எதிா்க்கட்சி வரிசையில் 94-ஆம் எண் இருக்கையில் இருந்த விஜேந்தா் குப்தா, 100-ஆம் எண் இருக்கைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.