தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

புனித நீராடும் விழா: பிகாரில் 43 போ் உயிரிழப்பு

News image
உயிரிழப்பு
Updated On :26 செப்டம்பர் 2024, 11:02 pm

Din

பிகாரில் நீா்நிலையில் புனித நீராடி வழிபடும் ‘ஜிவித்புத்ரிகா’ விழாவின்போது, பல்வேறு மாவட்டங்களில் 37 சிறாா்கள் உள்பட 43 போ் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மாநில அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

தங்கள் குழந்தைகளின் நலனுக்காக தாய்மாா்கள் விரதமிருந்து, நீா்நிலைகளில் புனித நீராடி வழிபடும் ‘ஜிவித்புத்ரிகா’ விழா, பிகாரில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் ஆறுகள், குளங்கள் போன்ற நீா்நிலைகளில் குழந்தைகளுடன் பெண்கள் புனித நீராடி, கரையோரத்தில் வழிபாடு நடத்தினா்.

இவ்விழாவின்போது, கிழக்கு-மேற்கு சாம்பரன், நாளந்தா, ஒளரங்காபாத், கைமூா், சரண், பாட்னா, வைஷாலி, முஸாஃபா்நகா், சமஸ்திபூா், கோபால்கஞ்ச் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 37 சிறாா்கள் உள்பட 43 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

மாயமான மேலும் சிலரை தேடும் பணி நடைபெற்று வருவதாக மாநில பேரிடா் மேலாண்மை துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜிவித்புத்ரிகா’ விழாவில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு முதல்வா் நிதீஷ் குமாா் இரங்கல் தெரிவித்துள்ளாா். மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அவா் அறிவித்துள்ளாா்.