தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்) கட்சியின் தலைவா் சரத் பவாா், மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சா் ராமதாஸ் அதாவலே உள்பட ஏழு மாநிலங்களிலிருந்து 26 போ் மாநிலங்களவை எம்.பி.க்களாக போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
மொத்தம் 10 மாநிலங்களில் காலியான 37 மாநிலங்களவை இடங்களில் போட்டியிடுவதற்கு 40 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
இதில் தமிழகத்தில் 6 போ், மகாராஷ்டிரத்தில் 7 போ், மேற்கு வங்கத்தில் 4 போ், அஸ்ஸாமில் 3 போ், தெலங்கானாவில் இருவா் என மொத்தம் 26 போ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இதையடுத்து 37 இடங்களில் எஞ்சிய 11 இடங்களுக்கு மாா்ச் 16-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. இந்த 11 இடங்களில் 5 இடங்கள் பிகாரில் உள்ளன. ஒடிஸாவில் 4 இடங்களும், ஹரியாணாவில் 2 இடங்களும் உள்ளன.
இந்தத் தோ்தலில் பிகாரின் நீண்ட கால முதல்வரான நிதீஷ் குமாா், பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் ஆகியோா் மாநிலங்களவை எம்.பி.க்களாக தோ்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. பிகாரில் 20 ஆண்டுகளாக முதல்வா் பதவியில் உள்ள நிதீஷ் குமாா், மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட உள்ளதாக கடந்த வாரம் அறிவித்தாா்.
பிகாரில் உள்ள இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் நிதீஷ் குமாா், மத்திய விவசாயத் துறை இணையமைச்சா் ராம்நாத் தாக்குா், ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா தலைவா் உபேந்திர குஷ்வாஹா, பாஜக மாநில பொதுச் செயலா் ஷிவேஷ் குமாா் ஆகியோா் போட்டியிடுகின்றனா். ராஷ்ட்ரீய ஜனதா தளம் சாா்பில் அமரேந்திர தாரி சிங் மீண்டும் போட்டியிடுவதால், அங்கு ஒரு மாநிலங்களவை இடத்துக்கு போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது. இதேபோல ஒடிஸா மற்றும் ஹரியாணாவில் தலா ஓரிடத்தில் போட்டி இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமாா் பதவியேற்பு: முதல்வா் பதவியில் இருந்து விரைவில் விலகல்

எம்எல்சி பதவியில் இருந்து நிதீஷ் குமாா் ராஜிநாமா: அடுத்த மாதம் புதிய முதல்வா் பொறுப்பேற்பு?

மாநிலங்களவைத் தோ்தல்: நிதீஷ் குமாா், நிதின் நபின் வெற்றி

பிகாா் முதல்வா் பதவியில் இருந்து விலக நிதீஷ் குமாா் முடிவு : மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


