செப்டம்பர் 21ஆம் தேதி பெங்களூருவை உலுக்கிய மகாலட்சுமி கொலை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்தி ரஞ்சய் ராய் தற்கொலை செய்துகொண்டு இறந்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
பெண் தோழியான மகாலட்சுமியை திருமணம் செய்ய விரும்பிய முக்தி, இது தொடர்பாக தொடர்ந்து மகாலட்சுமியுடன் சண்டையிட்டு வந்த நிலையில், மகாலட்சுமி திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளாததால் கொலையில் முடிந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெங்களுருவின், மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மகாலட்சுமி கொல்லப்பட்டு, 59 துண்டுகளாக அவரது உடல் வெட்டப்பட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில், தேடப்பட்டு வந்த முக்தி ரஞ்சன் ராய், ஒடிசா மாநிலத்தில் தனது சொந்த கிராமத்தில், மரம் ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்வதற்கு, முன்பு முக்தி எழுதிய தற்கொலைக் குறிப்பு காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில், முக்தி, மகாலட்சுமியை கொல்வதற்கு முன்பு, கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.
இது குறித்து காவல்துறையினர் தெரிவித்திருப்பதாக வெளியாகும் தகவலில், நான் செய்தேன் என்று கடிதம் தொடங்குகிறதாம். மேலும், மகாலட்சுமியின் அரக்க குணம் மற்றும் கடுமையாக சண்டையிடும் குணங்களால், தான் மிகுந்த சலிப்படைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
திருமணம் தொடர்பான வாக்குவாதத்தில், மகாலட்சுமி என்னை தாக்கினார், என்னை கோபத்துடன் கத்தினார். இதனால், நான் அவரைத் தாக்கிக் கொன்றேன், அவரது உடல்களை பல துண்டுகளாக வெட்டினேன் என்று தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், பத்ரக் காவல்துறையினர், அந்த தற்கொலை கடிதம் முக்தி எழுதியதுதானா என்று கையெழுத்தினை ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

கள்ள வாக்களிப்பு: அதிகாரிகளிடம் இளைஞா் வாக்குவாதம்
பாட்டியின் கைமணமே ருசியின் ரகசியம்

புதுக்கோட்டை: மகனுடன் நிலத் தகராறு.. பெற்றோர் தூக்கிட்டுத் தற்கொலை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


