மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பணமோசடி வழக்கில் தெலங்கானா அமைச்சர் வீட்டில் சோதனை!

பணமோசடி வழக்கில் தெலங்கானா வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேடி சீனிவாச ரெட்டி வீட்டில் சோதனை..

News image

அமலாக்கத்துறை

Updated On :27 செப்டம்பர் 2024, 7:38 am

பணமோசடி வழக்கில் தெலங்கானா வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேடி சீனிவாச ரெட்டி மற்றும் மகன் பி.ஹர்ஷா ரெட்டி ஆகியோரின் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அமைச்சரின் வீடு, நகரின் புறநகரில் உள்ள ஹிமாயத் சாகரில் உள்ள அவரது பண்ணை வீடு மற்றும் அவரது மகன், மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான பிற இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இதையும் படிக்க: வரம் தரும் வாரம்!

ஹர்ஷா ரெட்டிக்கு சொந்தமான கட்டுமான நிறுவன வளாகத்திலும், அவர்களது சொந்த மாவட்டமான கம்மத்தில் உள்ள மற்ற இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

பதினாறு குழுவினர் இணைந்து வீடு, அலுவலகங்கள் மற்றும் பிற வளாகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

ஹர்ஷா ரெட்டி ரூ.7 கோடி மதிப்புள்ள ஏழு விலையுயர்ந்த கடிகாரங்களை வாங்கியதாக வருவாய் புலனாய்வு இயக்குனகரம்(டிஆர்ஐ) அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழங்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.