குஜராத்தில் கனமழை: சுவர் இடிந்து 5 வயது சிறுவன் பலி!

2 சகோதரர்களும் தாயாரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் 5 வயது சிறுவன் பலியானார்.

குஜராத்தில் கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ரச்சர்டா கிராமத்தில் சனிக்கிழமையில் அதிகாலை பெய்த கனமழையின்போது, அங்கிருந்த ஒரு கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தின்போது வீட்டினுள்ளே 3 குழந்தைகளும் அவர்களின் தாயாரும் தூங்கிக் கொண்டிருந்தனர். சுவர் இடிந்து, 5 வயது சிறுவன் மீது விழுந்ததில், சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இருப்பினும், அவரது 2 சகோதரர்கள் மற்றும் தாயாரும் காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com