
உத்தரப் பிரதேசத்தில் முதுகலை அறுவை சிகிச்சை மாணவர் விஷ ஊசி செலுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயக்ராஜில் உள்ள மோதி லால் நேரு மருத்துவக் கல்லூரியில் கார்த்திகேய ஸ்ரீவஸ்தவா (28) என்பவர் முதுகலை அறுவை சிகிச்சை படித்து வந்துள்ளார். உத்தரகண்டில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு மருத்துவம் படிக்க வந்துள்ளார்.
மேலும், எஸ்.ஆர்.என். மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில், அவர் சனிக்கிழமையில் மருத்துவமனை அருகேயே, அவரது காரினுள்ளேயே தற்கொலை செய்து கொண்டார்.
விஷ ஊசி செலுத்திக் கொண்டு கார்த்திகேய ஸ்ரீவஸ்தவா தற்கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கார்த்திகேய ஸ்ரீவஸ்தவா தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்தை அடைந்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.