

உத்தரப் பிரதேசத்தில் தண்டவாளத்தில் கல் வைத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், மாணிக்பூர் ரயில் பாதையின் பண்டா-மஹோபா ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வைத்துள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
உடனே அங்கு விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
பின்னர், ரயில் தண்டவாளத்தில் கல் வைத்ததாக நபர் ஒருவரையும் அவர்கள் கைது செய்தனர். தொடர்ந்து அந்த நபரை காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்மூலம் ரயிலை கவிழ்க்கும் முயற்சியை காவல்துறையினர் தக்க நேரத்தில் முறியடித்தனர்.
சமீபகாலமாக ரயில்வே தண்டவாளங்களில் இரும்பு ஆணி, எரிவாயு சிலிண்டர், சிமெண்ட் கற்கள், இரும்புக் கம்பி போன்றவற்றை வைத்து ரயிலை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக செப்டம்பர் 24 அன்று, சூரத்தில் உள்ள கிம் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் இருந்து மீன் தகடுகள் மற்றும் சாவிகளை அகற்றினர்.
மேலும் இதுதொடர்பாக மூன்று ரயில்வே ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.