ஜார்க்கண்ட் வளர்ச்சிக்கும் நல்லாட்சிக்கும் நாம் அனைவரும் பிரதமருடன் கைகோர்த்து நடக்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்டின் தியோகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாபா பைத்நாத் கோயிலில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் வழிபாடு செய்தார். 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதையடுத்து செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவின் பரிவர்தன் யாத்திரை ஜார்க்கண்டில் மேற்கொள்ளப்படுகிறது. ஆறு பரிவர்த்தன யாத்திரைகளில் ஒன்று தும்காவில் நடைபெறுகிறது. அதற்கு முன் பாபா பைத்யநாத்தின் ஆசியைப் பெற இங்கு வந்துள்ளேன்.
மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பொதுமக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் ஜார்க்கண்டின் வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் நாம் அனைவரும் பிரதமருடன் கைகோர்த்து நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இரட்டை இயந்திர ஆட்சி அமையட்டும். பாஜக ஆட்சி அமைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
ஜார்க்கண்டில் அரசின் பதவிக்காலம் 2025 ஜனவரியில் முடிவடைய உள்ளதால், 81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கு டிசம்பர் 2024-க்குள் தேர்தல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் தேதியைத் தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.