திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

ஜார்க்கண்ட் முதல்வராக இன்று பதவியேற்கிறார் சம்பயி சோரன்! 

ஜார்க்கண்ட் முதல்வராக சம்பயி சோரன் இன்று பதவியேற்க உள்ளார். 

ஜார்க்கண்ட் முதல்வராக இன்று பதவியேற்கிறார் சம்பயி சோரன்

Updated On :

ஜார்க்கண்ட் முதல்வராக சம்பயி சோரன் இன்று பதவியேற்க உள்ளார். 

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் மாளிகையில் பிற்பகல் 12.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், நேற்று சம்பயி சோரன் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கி, ஆட்சியமைக்க உரிமை  கோரினார். 

சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை புதன்கிழமை சுமாா் 7 மணி நேரம் விசாரணை நடத்தியதைத் தொடா்ந்து, ஜாா்க்கண்ட் முதல்வா் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் ராஜிநாமா செய்தாா். அதன் பின்னா் அமலாக்கத் துறையினா் அவரை உடனடியாக கைது செய்தனா்.

புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் நம்பிக்கைக்குரியவரும், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சருமான சம்பயி சோரன் தோ்வு செய்யப்பட்டாா்.

67 வயதான பழங்குடியின தலைவர், மாநிலத்தின் 12வது முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.