செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

திருநங்கை ஆசிரியருக்கு நேர்ந்த அநீதி!

குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச தனியார் பள்ளிகளில் திருநங்கை ஆசிரியருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. 

கோப்புப்படம்.

Published On :7 பிப்ரவரி 2024, 8:56 pm IST

உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிய பள்ளியால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருநங்கை ஆசிரியர் 6 நாள்களில் வேலையை விட்டு நீக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

குஜராத்தில் அதே ஆசிரியருக்கு பணி நியமனக் கடிதம் வழங்கப்பட்டு அவரது பாலினம் தெரிந்தபின் அவருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. இந்த அநீதிகளைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை நாடிய ஆசிரியர், தன் பாலினத்தை காரணமாகக் கொண்டு இரண்டு பணிகள் தன்னை பணியிலிருந்து நீக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பள்ளி நிர்வாகங்கள் உரிய பதிலையளிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. மேலும் முடிந்த உதவிகளை செய்வதாக தலைமை நீதிபதி டி.வொய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே. பி. பர்டிவ்லா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கூறியுள்ளனர்.

குஜராத் மற்றும் உத்திரப் பிரதேச அரசுகளுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தனது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக அந்த திருநங்கை ஆசிரியர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.