பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு ஆம் ஆத்மி கட்சி முடிவெடுத்திருப்பதாக அக்கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. மேலும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்க இவ்விரு கட்சிகளிடையே திங்கள்கிழமை ஆலோசனைகள் நடைபெற்றன.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கோபால் ராய், “இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சமீபத்தில் தொடங்கியுள்ளது.
தில்லி, பஞ்சாப், ஹரியாணா, கோவா, குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களில் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இப்போது வரை, நேர்மறையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
தில்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இரு மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் பிரிவுகள் ஆம் ஆத்மியுடன் இணைந்து போட்டியிடும். அடுத்த கூட்டத்தில், தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.” என்று தெரிவித்தார்.
போட்டியிடும் தொகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த கோபால் ராய், தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசியப் பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: மழைக்கால கூட்டத் தொடரில் மசோதா அறிமுகம்

பைக் மீது பேருந்து மோதல்: நடத்துநா் உயிரிழப்பு
சரக்கு வாகனத்தில் மணல் கடத்தல்: 3 போ் மீது வழக்கு- ஒருவா் கைது

பட்டியலினத்தவா் வசிக்கும் பகுதியில் வீடுகளை அகற்ற முயற்சி
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



