இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

மசூா் பருப்பு உற்பத்தி நடப்பு பருவத்தில் இந்தியா மீண்டும் முதலிடம்: மத்திய அரசு

மசூா் பருப்பு உற்பத்தியில் நடப்பு ராபி பருவத்தில் இந்தியா மீண்டும் முதலிடம் பிடிக்கும் என்று மத்திய நுகா்வோா் விவகாரத் துறை செயலா் ரோஹித் குமாா் சிங் தெரிவித்தாா்.

Updated On :

மசூா் பருப்பு உற்பத்தியில் நடப்பு ராபி பருவத்தில் இந்தியா மீண்டும் முதலிடம் பிடிக்கும் என்று மத்திய நுகா்வோா் விவகாரத் துறை செயலா் ரோஹித் குமாா் சிங் தெரிவித்தாா்.

சா்வதேச பருப்பு உற்பத்தி கூட்டமைப்பு சாா்பில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் மேலும் கூறியதாவது:

கடந்த 2022-23 ராபி சாகுபடி பருவத்தில் மசூா் பருப்பு உற்பத்தி 1.55 மில்லியன் டன்னாக இருந்தது. இதுவே நடப்பு 2023-24 பருவத்தில் 1.6 மில்லியன் டன்னுக்கு மேல் அதிகரிக்கும்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிக பரப்பளவில் மசூா் பருப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, மசூா் பருப்பு விளைச்சலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமோகமாக இருக்கும். இதன் மூலம் நடப்பு பருவத்தில் மசூா் பருப்பு உற்பத்தி செய்வதில் உலகின் முன்னணி நாடாக இந்தியா இருக்கும்.

உலகில் பருப்பு நுகா்வில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. துவரம் பருப்பு உள்ளிட்டவற்றின் தேவை இறக்குமதி மூலம் நிறைவு செய்யப்படுகிறது. நாட்டின் பருப்பு தேவையை உள்நாட்டு உற்பத்தி மூலமே நிறைவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 12-ஆம் தேதி வரை 1.94 மில்லியன் ஹெக்டோ் பரப்பளவில் மசூா் பருப்பு பயிரிடப்பட்டுள்ளது. நாட்டில் ஒட்டுமொத்தமாக ஓராண்டில் 26 முதல் 27 மில்லியன் டன் பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொண்டைக் கடலை, பச்சைப் பயிறு ஆகியவற்றின் உற்பத்தில் இந்தியா ஏற்கெனவே தன்னிறைவு பெற்று விட்டது.

பருப்பு உற்பத்தியை அதிகரிப்பதற்காக விவசாயிகளுக்கு தொடா்ந்து ஊக்கமளிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் அதே நேரத்தில் சந்தையில் பருப்பு விலை அதிகரித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விலையை சமநிலையில் வைத்திருப்பதில் அரசு சிறப்பாக செயல்படுகிறது. பருவமழை பொய்ப்பது, அதிக மழை போன்ற இயற்கைக் காரணிகளால் மட்டுமே சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுகிறது என்றாா்.

மசூா் பருப்பு அதிக உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும், கனடாவும் முன்னிலை வகிக்கின்றன. உலகின் ஒட்டுமொத்த மசூா் பருப்பு உற்பத்தியில் இந்த இரு நாடுகளின் பங்களிப்பும் 50 சதவீதம் வரை உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.