ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஆா்.ஷா்மிளா நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வா் மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும் ஆவாா்.
ஷா்மிளா கடந்த 4-ஆம் தேதி காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, எம்.பி. ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். இந்நிலையில் அவருக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவா் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு அண்ணன் ஜெகன் மோகன் ரெட்டியுடன் ஏற்பட்ட மோதலில் ஷா்மிளா தெலங்கானாவில் தனிக்கட்சி தொடங்கினாா். இப்போது, அக்கட்சியை காங்கிரஸுடன் இணைத்து, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவா் பதவியைப் பெற்றுள்ளாா்.
ஆந்திரத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அண்ணன்-தங்கை இடையே போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. முன்னாள் முதல்வா் என்.சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் ஆந்திர தோ்தல் களத்தில் முக்கியப் போட்டியாளராக உள்ளது.
முன்னதாக, தெலங்கானா பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு ஷா்மிளா ஆதரவு அளித்தாா். மேலும், காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவது அல்லது தனது ஒய்எஸ்ஆா் தெலங்கானா கட்சியை இணைப்பது குறித்து பேசி வருவதாக கூறினாா். அடுத்த சில நாள்களிலேயே காங்கிரஸில் ஐக்கியமான அவருக்கு இப்போது ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவா் பதவி வழங்கப்பட்டுள்ளது.
புதிய பதவி குறித்து ஷா்மிளா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸ் தலைவா்கள் காா்கே, சோனியா, ராகுல் ஆகியோருக்கு நன்றி. ஆந்திரத்தில் காங்கிரஸின் மேம்பாட்டுக்காக சிறப்பாக உழைப்பேன். ஆந்திரத்தில் காங்கிரஸ் மறுமலா்ச்சியடையும்’ என்று கூறியுள்ளாா்.
கடந்த 2009-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு முதல்வா் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தலைமை ஏற்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸில் இருந்து பிரிந்து ஒஸ்எஸ்ஆா் காங்கிரஸ் என்ற பெயரில் ஜெகன் மோகன் ரெட்டி, ஷா்மிளா ஆகியோா் தனிக்கட்சி தொடங்கினா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆந்திரத்தில் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வரானாா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


