பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

மணிப்பூருக்கு பிரதமர் வாழ்த்து, கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்!

மணிப்பூரின் மாநில தினத்திற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்ததை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கடுமையாக விமர்சித்துள்ளார். 
Published on

மணிப்பூரின் மாநில தினத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததை காங்கிரஸ் பொதுச் செயலாளர் எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். 

'மணிப்பூரின் மாநில தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்க நேரமுள்ள பிரதமருக்கு, அங்கு செல்லவோ. அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கவோ நேரமில்லை' எனத் தன் எக்ஸ் தளப்பக்கத்தில் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.  

'மக்களின் இன்னல்கள் இன்னும் தொடர்கின்றன. வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகிறது. சமூக நல்லிணக்கம் குலைந்துள்ளது. ஆனால் பிரதமர் மணிப்பூர் பற்றி மௌனம் மட்டுமே சாதிக்கிறார். மாநிலத்தின் அரசியல் தலைவர்களையும், கட்சிகளையும் சந்திப்பதைத் தவிர்த்துவருகிறார்.'  எனக் கூறியுள்ளார். 

சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இந்த விமர்சனத்தை வைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com