
மேற்கு வங்கத்தில் காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்துக்கு அனுமதி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மேற்கு வங்கத்தில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய சிக்கல் எழுந்துள்ளதாக மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌதரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிலிகுரியில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் பேசியதாவது: இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி தேவைப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் நடப்பதால் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் வடகிழக்கில் முன்பு பிரச்னைகளை சந்தித்தது. தற்போது திரிணமூல் ஆட்சியில் உள்ள மேற்கு வங்கத்தில் பிரச்னைகளை சந்தித்து வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.