பாஜகவின் ஆட்சியில் நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். விவசாயிகளின் வருவாயை பாஜக இரட்டிப்பாக்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்ததை ராகுல் சுட்டிக்காட்டினார்.
இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தி பிகாரில் நூற்றுக்கணக்கான விவசாயிகளைச் சந்தித்து கலந்துரையாடினார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'கடந்த 2014 ஆம் ஆண்டைவிட விவசாயிகளின் கடன் 60% அதிகரித்துள்ள நிலையில், மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 7.5 லட்சம் கோடி மதிப்பிலான தொழிலதிபர்களின் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது.' எனக் குற்றம் சாட்டினார்.
மேலும், 'பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளின் பங்கான ரூ.2700 கோடியை நிறுத்தி வைத்துள்ள தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், ரூ. 40,000 கோடி லாபம் பார்க்கின்றன. முறையான குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாததால் விலையுயர்ந்த உரங்கள், விலையுயர்ந்த விதைகள், விலையுர்ந்த நீர் பாசனம் ஆகியவற்றைப் பெறுவதில் விவசாயிகளுக்கு பெரும் சிக்கல் உள்ளது.'
இதையும் படிக்க: அயோத்தி ராமர் கோயில் கனவு நிறைவேற்றம்: குடியரசுத் தலைவர் உரை
'விவசாய செலவுகளைக் குறைப்பதும், விவசாயிகளின் பயிர்களுக்கு சரியான விலையை நிர்ணயிப்பதுவுமே காங்கிரஸின் குறிக்கோள். விவசாயிகள் செழிப்படைய அவர்கள் பொருளாதாரத்தில் வ்ளர்வதே வழி' என அவர் தெரிவித்துள்ளார்.
'நமது அரசு விவசாயிகளுக்கான அரசாக இருக்கும் தொழிலதிபர்களுக்கான அரசாக இருக்காது' எனவும் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.