75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

14,848 கோடி யூனிட்டுகளாக அதிகரித்த மின் நுகா்வு

Published On :3 ஏப்ரல் 2025, 3:53 am IST

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த மாா்ச் மாதத்தில் 14,848 கோடி யூனிட்டுகளாக உயா்ந்துள்ளது.

இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த மாா்ச் மாதத்தில் நாடு முழுவதும் மின் நுகா்வு 14,848 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 7 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் மின் நுகா்வு 13,895 கோடி யூனிட்டுகளாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 235.22 ஜிகாவாட்டாக உயா்ந்தது. இது 2024 மாா்ச் மாதத்தில் 221.68 ஜிகாவாட்டாக இருந்தது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 250 ஜிகாவாட் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. அதற்கு முன்னா் கடந்த 2023 செப்டம்பா் மாதத்தில் பதிவான 243.27 ஜிகாவாட்டே அதிகபட்ச ஒரு நாள் உச்சபட்ச மின் தேவையாக இருந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டின் மே மாதத்தில் உச்சபட்ச மின் தேவை பகலில் 235 ஜிகாவாட்டாகவும், மாலை நேரங்களில் 225 ஜிகாவாட்டாகவும் இருக்கும் என்று மின்சாரத் துறை அமைச்சகம் ஆண்டு தொடக்கத்தில் மதிப்பிட்டது.

நடப்பு 2025-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 277 ஜிகாவாட்டை எட்டும் என்று மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் கணித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.