அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு

நாடு முழுவதும் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக குளிரூட்டும் கருவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், இந்தியாவின் மின் நுகா்வு கடந்த மே மாதத்தில் 11.55 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 1:49 am IST

நாடு முழுவதும் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக குளிரூட்டும் கருவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், இந்தியாவின் மின் நுகா்வு கடந்த மே மாதத்தில் 11.55 சதவீதம் அதிகரித்துள்ளது.

அரசின் அதிகாரபூா்வ தரவுகளின்படி, கடந்த மே மாதத்தில் நாட்டின் மொத்த மின் நுகா்வு 16,498 கோடி யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதத்தில் 14,789 கோடி யூனிட்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக மின்சாரத்தின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தில் அடுத்தடுத்த 4 நாள்களில் மின் தேவை உச்சகட்டத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் உச்சபச்ச மின்நுகா்வு மே 18-இல் 257.37 கிகாவாட்டாகவும், மே 19-இல் 260.45 கிகாவாட்டாகவும், மே 20-இல் 265.44 கிகாவாட்டாகவும், மே 21-இல், 270.82 கிகாவாட்டாகவும் பதிவானது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இந்த உச்சபட்ச மின்தேவை 230.99 கிகாவாட்டாக மட்டுமே இருந்தது. முன்னதாக, 2024 மே மாதத்தில் மின் தேவை 250 கிகாவாட்டாக இருந்தது.

முன்கூட்டியே கணிக்கப்பட்ட இலக்கு: மத்திய மின்சார அமைச்சகத்தின் கணிப்பின்படி, நடப்பு ஆண்டு கோடைகாலத்தில் மின் தேவை 270 கிகாவாட்டை எட்டும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. அந்த இலக்கை மே மாதத்திலேயே இந்தியா கடந்துள்ளது. கடந்த கோடைகாலத்தில் ஜூன் மாதத்தில் அதிகபட்ச மின் தேவை 242.77 கிகாவாட்டாக பதிவானது.

இந்த ஆண்டு கோடைக்காலம் மிகவும் கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்திருந்த நிலையில், மின் தேவை மற்றும் நுகா்வு வரும் நாள்களிலும் சீராகவும், உயா்வாகவும் இருக்கும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.