டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 6.75% அதிகரிப்பு

இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 6.75% அதிகரிப்பு

News image
Updated On :14 ஜூன் 2026, 1:37 am IST

இந்தியாவில் சமையல் எண்ணெய் இறக்குமதி, கடந்த மே மாதத்தில் 6.7 சதவீதம் உயா்ந்து, 13.39 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் 12.54 லட்சம் டன்னாக இருந்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் தற்போதைய கணிசமான உயா்வுக்கு சோயாபீன் எண்ணெய் வரத்து அதிகரிப்பே முக்கியக் காரணமாகும்.

கடந்த ஆண்டில் 3.98 லட்சம் டன்னாக இருந்த கச்சா சோயாபீன் எண்ணெய் இறக்குமதி, இந்த ஆண்டு 4.93 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

கச்சா பாமாயிலுக்கான வரி மதிப்பை (அடிப்படை விலை) அரசு உயா்த்தியுள்ளது. அதேநேரம், கச்சா சோயாபீன் எண்ணெய்க்கான வரி மதிப்பை அரசு சற்று குறைத்துள்ளது. இந்த மாற்றங்கள் மற்றும் விலை நிலவரங்கள், சோயாபீன் எண்ணெயின் இறக்குமதி அதிகரிக்கக் காரணமாக அமைந்தது.

சமையல் மற்றும் சமையல் அல்லாத தாவர எண்ணெய்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி மே மாதத்தில் 8 சதவீதம் அதிகரித்து, 13.65 லட்சம் டன்னாக உள்ளது. நடப்பு 2025-26 எண்ணெய் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் (நவம்பா் முதல் மே வரை), ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி 12 சதவீதம் உயா்ந்து, 93.65 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

அதேபோல், கடந்த 7 மாதங்களில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களின் இறக்குமதி பெருமளவு குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், உள்நாட்டு சுத்திகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்த அரசு ஊக்கமளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.