22 இந்திய மொழிகளில் பாட நூல்கள்: பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ அழைப்பு

’பாரதிய பாஷா புஸ்தக்' திட்டத்தின் கீழ் பிராந்திய மொழிகளில் தொழில்நுட்பக் கல்வி
22 இந்திய மொழிகளில் பாட நூல்கள்: பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ அழைப்பு
Published on
Updated on
1 min read

’பாரதிய பாஷா புஸ்தக்' என்ற புதிய திட்டத்தின் கீழ் பிராந்திய மொழிகளில் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த மின் நூல்களை உருவாக்குவதற்காக பல்கலைக்கழகக் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ அழைப்பு விடுத்துள்ளது.

"பாரதிய பாஷா புஸ்தக்' என்ற திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்திய மொழிகளில் எண்ணிம வழியிலான (மின் நூல்கள்) புத்தகங்களை வழங்குவதற்கான ஒரு புதிய முன்னெடுப்பாகும். கல்வி கற்பதை மேலும் எளிதாக அணுகக் கூடியதாக மாற்றுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த பாடங்களை ஆங்கிலம் மற்றும் 22 இந்திய மொழிகளில் நேரடியாக எழுதவும், ஏற்கெனவே ஆங்கிலத்தில் உள்ள பாடப்பொருள்களை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவை இணையதளத்தில் மின் நூல்களாக பதிவேற்றம் செய்யப்பட்டு பிராந்திய மொழிகளில் தொழில்நுட்பக்கல்வி நூல்கள், பாடப்பொருள் சார்ந்த கற்றல் வளங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

எனவே, இந்தத் திட்டத்தின் கீழ் மின் நூல்கள் உருவாக்கப் பணிகள், பாடப்பொருள் தயாரித்தல் ஆகியவற்றில் பங்கெடுக்க விரும்பும் அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் இது தொடர்பான தங்களது விருப்பத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) தளத்தில் பதிவு செய்யலாம் என ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com