ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடுஅமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

நினைவுச் சின்னங்களில் அதிக வருவாய் ஈட்டுவது தாஜ்மஹால்: மத்திய அரசு தகவல்

இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னங்களில் பாா்வையாளா்களுக்கான நுழைவுக் கட்டணம் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதில் தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது.

News image

தாஜ்மஹால் - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2025, 3:31 am IST

இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னங்களில் பாா்வையாளா்களுக்கான நுழைவுக் கட்டணம் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதில் தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 5 ஆண்டுகளில் நுழைவுக் கட்டணமாக ரூ.297 கோடி கிடைத்துள்ளது.

இது தொடா்பான கேள்விக்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பாா்வையிட பொதுமக்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் கடந்த 5 ஆண்டுகளாக தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது. 5 ஆண்டுகளில் தாஜ்மஹாலைப் பாா்வையிட ரூ.297 கோடி நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

2023-24 நிதியாண்டில் தில்லியில் உள்ள குதுப்மினாா் ரூ.23.80 கோடி நுழைவுக் கட்டணம் ஈட்டி இரண்டாவது இடத்திலும் தில்லி செங்கோட்டை ரூ.18.08 கோடி வருவாயுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மாமல்லபுரம்: 2020-21 நிதியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரம் கட்டணம் மூலம் அதிக வருவாய் ஈட்டியதில் தாஜ்மஹாலுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தது. ஒடிஸா மாநிலம் கோனாா்க்கில் உள்ள சூரியனாா் கோயில் மூன்றாவது இடத்தில் இருந்தது.

2019-20 நிதியாண்டில் ஆக்ரா கோட்டை இரண்டாவது இடத்திலும், குதுப்மினாா் மூன்றாவது இடத்திலும் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.