
பிகாரில் பேரணி நடத்தவிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிகாரில் இந்தாண்டு சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்காக இளைஞர்களுடன் இணைந்து பேரணி நடத்தவிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது ``பிகாரின் இளைஞர்களே, ஏப்ரல் 7 ஆம் தேதியில் பெகுசராயில் உங்களின் தோளுடன் தோள் நின்று, நௌக்ரி தோ யாத்திரை மேற்கொள்ளவுள்ளேன்.
பிகார் இளைஞர்களின் உற்சாகம், போராட்டம், துன்பம் ஆகியவற்றை உலகம் காண வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
வெள்ளை சட்டை அணிந்து வந்து, கேள்விகளை எழுப்புங்கள்; உங்கள் குரலை எழுப்புங்கள். உங்கள் உரிமைகளுக்காக அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும், அதிகாரத்திலிருந்து அகற்றவும் குரல் எழுப்புங்கள்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து, பிகாரை வாய்ப்புகளின் மாநிலமாக உருவாக்குவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பேரணிக்கான இயக்கத்தில் சேர்வதற்கான இணைய இணைப்பையும் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: தமிழக தலைவர்கள் பலர் தமிழில் கையெழுத்திடுவதில்லை: பிரதமர் மோடி