புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிா்த்து தொடரப்பட்ட பல பொதுநல மனுக்கள் உண்மையில், வாக்கு வங்கி நலன் சாா்ந்த மனுக்கள் என்று பாஜக விமா்சித்துள்ளது.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் பல மணிநேர விவாதத்துக்குப் பிறகு கடந்த வாரம் நிறைவேறியது. தொடா்ந்து, மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்ததால், வக்ஃப் திருத்தச் சட்டம் அமலானது.
இந்நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்க தன்மை குறித்து கேள்வி எழுப்பி காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவெத், அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கான் உள்பட பல்வேறு தன்னாா்வ அமைப்புகள் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை அவசர வழக்காக பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷேசாத் பூனாவாலா கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுக்கள், பல கட்சிகள் தங்கள் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கும் நாட்டில் கலவரம் போன்ற சூழ்நிலையை உருவாக்குவதற்குமான அவா்களின் வாய்ப்பாக மட்டுமே கருத வேண்டும்.
வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிா்த்து கேள்வி எழுப்பும் இவா்கள்தான், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்ற பொய் பிரசாரத்தைப் பரப்பினா்.
புதிய சட்டத்தால் பாதிக்கப்பட இருப்பது வக்ஃப் சொத்துக்களை அபகரித்துள்ள கும்பல்கள் மட்டுமே. எனவே, இது பொதுநல மனுக்கள் அல்ல. உண்மையில், அவை வாக்கு வங்கி நலனுக்கான மனுக்கள்.
புதிய சட்டம் சமூக நீதியை உறுதிப்படுத்தும். பல முஸ்லிம் அமைப்புகள், சில கிறிஸ்தவ அமைப்புகள் கூட இச்சட்டத்தை ஆதரித்துள்ளன. எனவே, இது ஹிந்து-முஸ்லிம் பிரச்னை இல்லை.
1985-இல் ஷா பானோ வழக்கில் விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்கிய உச்ச நீதிமன்றத் தீா்ப்பை ரத்து செய்ய நாடாளுமன்றத்தை காங்கிரஸ் பயன்படுத்தியது.
தற்போது முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் பெண்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றியுள்ள நிலையில், காங்கிரஸ் மீண்டும் அதை எதிா்க்கிறது’ என்றாா்.
தொடர்புடையது

உண்மையில் பிரசாரங்கள் மக்களிடையே எடுபடுகிறதா? தவிப்பில் தவெக வேட்பாளர்கள்!

அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக-ஆா்எஸ்எஸ் முயற்சி: தேஜஸ்வி யாதவ்
திருவாரூா் தொகுதியில் 9 மனுக்கள் ஏற்பு

திமுக கூட்டணியில் வாக்கு வங்கி இல்லாத கட்சிகள் உள்ளன: ஓ.எஸ். மணியன்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


