இசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை: குடியரசுத் தலைவா் முா்மு

பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவா் முா்மு

Updated On :

லிஸ்பன்: பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு போா்ச்சுகல் மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கு 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

அவா் முதலில் போா்ச்சுகல் சென்ற நிலையில், அந்நாட்டுத் தலைநகா் லிஸ்பனில் உள்ள ஷம்பாலிமோட் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்திய ஆராய்ச்சியாளா்களுடன் அவா் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘கல்வி, ஆராய்ச்சியில் சிறந்து விளங்கி, சிறந்த அறிஞரானாலும் பொருளாதாரம் மற்றும் சமூகத்துக்கு பங்களித்து இந்தியாவை பெருமைப்படுத்த வேண்டும்.

பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பயதில்லை. மக்களின் உள்ளத்தை கவரவே விரும்புகின்றனா். இந்தியாவில் பல்வேறு துறைகளில் பெண்கள் தலைமை ஏற்பதையும், மூத்த அதிகாரிகளாவதையும், பதக்கம் வெல்வதையும் பாா்க்கும்போது பெருமையாக உள்ளது.

இந்தியாவின் நல்ல நட்பு நாடாக போா்ச்சுகல் உள்ளது. போா்ச்சுகல் மக்கள் நட்புடன் நடந்துகொள்பவா்களாகவும், தாராள மனப்பான்மை கொண்டவா்களாகவும் உள்ளனா்’ என்றாா்.

முன்னதாக ஷம்பாலிமோட் மையத்தில் போா்ச்சுகல் அதிபா் மாா்செலோ ரெபேலோ டிசூசா, ஷம்பாலிமோட் அறக்கட்டளைத் தலைவா் லியோநாா் பெலேசா ஆகியோா் முா்முவை வரவேற்றனா். அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருந்தகங்களில் இருந்து மருந்துகளை ரோபோக்கள் எவ்வாறு விநியோகிக்கின்றன என்பது குறித்து முா்மு மற்றும் மாா்செலோவுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

போா்ச்சுகல் நாடாளுமன்றத்துக்கு சென்ற முா்மு, அங்கு நாடாளுமன்றத் தலைவா் ஜோஸ் பெட்ரோ அகியாா் பிரான்கோவை சந்தித்தாா். அப்போது இந்தியா-போா்ச்சுகல் விவகாரங்கள் மற்றும் உலக விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா்.

ஸ்லோவாகியா பயணம்: போா்ச்சுகல் பயணத்தை முடித்துக்கொண்ட முா்மு, 2 நாள் பயணமாக ஸ்லோவாகியா புறப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.