
மல்யுத்த வீராங்கனையாக இருந்து காங்கிரஸ் எம்எல்ஏவாக மாறிய வினேஷ் போகத், பாஜக தலைமையிலான ஹரியாணா அரசு வழங்கிய ரூ.4 கோடி ரொக்கப் பரிசை தேர்வு செய்துள்ளார்.
பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் கூடுதலாக உடல் எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
மன வேதனையில், அவர் மல்யுத்த விளையாட்டிலிருந்தே ஓய்வுபெற்ற நிலையில், ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் சேர்ந்த வினேஷ், ஹரியாணா பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவில்லை என்றாலும், அவருக்கு வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கான மரியாதை வழங்கப்படும் என்று ஹரியாணா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க: தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கி மகிழ்ந்த பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள்!
மாநில விளையாட்டுக் கொள்கையின் கீழ் ரொக்கப் பரிசு, வீடு அல்லது குரூப்-ஏ அரசு வேலை ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அவர் பாரீஸ் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவரை கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதில், அவர் ரூ. 4 கோடியைத் தேர்வு செய்துள்ளார்.
ஹரியாணா ஷெஹ்ரி விகாஸ் பிரதிகரன் என்ற திட்டத்தின் அடிப்படையில் விளையாட்டில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாநில அமைச்சரவை அதன் விளையாட்டுக் கொள்கையின் கீழ் போகத்துக்கு சலுகைகள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவிலேயே ஹரியாணா மாநிலத்தின் விளையாட்டுக் கொள்கை மிகவும் தாராளமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.6 கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.4 கோடியும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.2.5 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.
இதையும் படிக்க: மீண்டும் கேப்டனாகிறார் தோனி! ருதுராஜ் கெய்க்வாட் விலகல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.