மீண்டும் கேப்டனாகிறார் தோனி! ருதுராஜ் கெய்க்வாட் விலகல்!

ருதுராஜ் கெய்க்வாட் விலகல்: மீண்டும் சென்னை கேப்டனாகிறார் தோனி.
தோனி - ருதுராஜ் கெய்க்வாட்.
தோனி - ருதுராஜ் கெய்க்வாட்.
Published on
Updated on
1 min read

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியதால், மீண்டும் கேப்டனாக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் முதல் போட்டியில் மட்டும் வெற்றிபெற்ற நிலையில், 4 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில், நாளை நடைபெறும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி விளையாடுகிறது.

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து தற்போதைய கேப்டன் ருதுராஜ் விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால், சென்னை அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

தோனி தலைமையில் வெற்றிகரமாகவும் செயல்பட்டு சென்னை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்த தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடி வந்தார்.

இதையும் படிக்க: தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கி மகிழ்ந்த பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள்!

கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில், மீதமுள்ள போட்டிகளில் தோனியே அணியை வழிநடத்துவார் என அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிளமிங் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைமைப் பயிற்சியாளர் ஃப்ளெமிங் கூறுகையில், “ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கெய்க்வாட், ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் காயமடைந்தார். முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார். இதனால், எம்.எஸ்.தோனி கேப்டனாக பொறுப்பேற்பார்” என்றார்.

இதேபோன்று, இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு சென்னை கேப்டனாக இருந்த ரவீந்திர ஜடேஜா காயத்தால் விலகியதால், தோனியே கேப்டனாக பொறுப்பேற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்க: திட்டங்களை மிகச் சரியாக செயல்படுத்திய பந்துவீச்சாளர்கள்: குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com