
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சாளர்கள் அவர்களது திட்டங்களை மிகச் சரியாக செயல்படுத்தியதாக அவர்களை அணியின் உதவிப் பயிற்சியாளர் பார்த்திவ் படேல் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டு
நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் அவர்களது திட்டங்களை மிகச் சரியாக செயல்படுத்தியதாக அவர்களை அணியின் உதவிப் பயிற்சியாளர் பார்த்திவ் படேல் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த மாதிரியான ஆடுகளத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், அதற்கு முக்கிய காரணம் அனைத்து பந்துவீச்சாளர்களும் அவர்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தியதே ஆகும். சிராஜ் மிகவும் நன்றாக பந்துவீசினார். இந்த தொடர் முழுவதும் பிரசித் கிருஷ்ணா அற்புதமாக பந்துவீசி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒருவர் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அணியில் யாருக்கும் எந்த ஒரு சிறப்பான ரோலும் ஒதுக்கப்படவில்லை. அனைவரும் அணிக்காக அவர்களது பங்களிப்பை வழங்கி வருகிறார்கள் என்றார்.
இதையும் படிக்க: ஹசரங்கா இல்லாதது ராஜஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு..!
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.