அடுக்குமாடி குடியிருப்பு பராமரிப்புக்கு 18% ஜிஎஸ்டி! யாருக்கெல்லாம் பொருந்தும்?

அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்களுக்கான ஒழுங்குமுறை விதிகளில், 18% ஜிஎஸ்டி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு பராமரிப்பு செலவுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதால் குடியிருப்போருக்கு மேலுமொரு பேரிடி விழுந்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர், பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.7,500 கொடுப்பவராயின், 18% ஜிஎஸ்டியுடன் சேர்த்து கூடுதல் தொகையை அவர்கள் இனி கொடுக்க வேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்களுக்கான ஒழுங்குமுறை விதிகளில், 18% ஜிஎஸ்டி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதாவது, அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின் ஆண்டு வருவாய் ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தாலோ அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனிநபர், பராமரிப்பு செலவாக ரூ.7,500 கொடுத்தாலோ, 18% ஜிஎஸ்டி பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை வண்ணப்பூச்சு (பெயிண்ட்) அடிப்பது, மின்தூக்கியை சரிசெய்வது, பல்புகளை மாற்றுவது போன்றவற்றுக்கு அளிக்கப்படும் பராமரிப்புத் தொகைக்காக இந்த ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.

2018 ஜனவரியில் நடைபெற்ற 25வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் வீட்டு வசதி சங்கங்கள் பயன்பெறும் வகையில் ரூ.5,000 ஆக இருந்த வரம்புத் தொகை, ரூ. 7,500 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த வரி எப்படி வசூலிக்கப்படும்

அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தில் பராமரிப்பு செலவுக்காக நீங்கள் மாதம் ரூ. 9,000 கொடுக்கிறீர்கள் எனில், அவர்களின் ஆண்டு வருவாய் ரூ. 20 லட்சத்துக்கு மேல் இருக்கும். இப்போது உங்களுக்கு இந்த 18% ஜிஎஸ்டி பொருந்தும். அதனால் கூடுதலாக நீங்கள் ரூ.1,620 கொடுக்க வேண்டும்.

அமைச்சகம் கூறுவது என்ன?

இது குறித்து, நிதித் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒரு நிதியாண்டில் அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின் ஆண்டு வருவாய் ரூ. 20 லட்சத்துக்கு மேல் தாண்டவில்லை என்றால், அவர்கள் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்து அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனிநபர் மாதம் ரூ. 7,500 கட்டணம் செலுத்தினாலும், அந்த சங்கத்தின் ஆண்டு வருவாய் ரூ. 20 லட்சத்தைத் தாண்டவில்லை என்றால் அவர்களும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

ஆனால், அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தில் ஒரே நபர், இரு அடுக்குமாடி குடியிருப்புகளை வைத்திருப்பாராயின், அந்த இரு குடியிருப்புகளின் மொத்த தொகையும் சேர்த்து ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் வருமாயின், அவருக்கு இந்த ஜிஎஸ்டி பொருந்தும். அந்தக் குடியிருப்புகளில் வசிக்கும் தனிநபர்கள் மாதம் அளிக்கும் ரூ.7,500 உடன் சேர்த்து 18% ஜிஎஸ்டியையும் செலுத்த வேண்டும் என விளக்கம் அளித்தார்.

இந்த ஜிஎஸ்டி விகிதங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை வைத்திருப்பவர்களிடையேயும், அதில் வசிப்போர் இடையேயும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஆண்டு வருவாய் ரூ. 20 லட்சத்தைத் தொடும் ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பும் ஆண்டுக்கு ரூ.3.6 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும், இது 10 ஆண்டுகளில் ரூ.36 லட்சமாக அதிகரிக்கும்.

அதனுடன் இணக்கச் சுமை, அதாவது வருமான வரி மற்றும் பிற சட்டப்பூர்வ ஆவணங்களை சரிபார்க்கும் தணிக்கையாளருக்கு ரூ.1 - 2 லட்சம் செலவாகும்.

இதையும் படிக்க | வக்ஃப் சட்டத்தை எதிர்த்து கலவரம்: ஹிந்துக்கள் வீட்டைவிட்டு வெளியேறும் சூழல்! - பாஜக புகார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com