
சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளில் முஸ்லிம் மக்கள் தொகை எண்ணிக்கை திடீரென அதிகரித்தது எப்படி என கர்நாடக பாஜக தலைவர் ஆர். அசோகா கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,
பிற்படுத்தப்பட்டோர் ஆணைய முன்னாள் தலைவர் எச். காந்தாராஜுவை முதல்வர் சித்தராமையா தனது இல்லத்துக்கு அழைத்துப் பேசி சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். இது தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளது.
இதில், கணக்கெடுப்பு நடத்தப்பட்ட விதமே கேள்விக்குரியதாக உள்ளது. இந்த அறிக்கையானது லட்சம் மற்றும் கோடிக்கணக்கான மக்களை நேரடியாக சந்திக்காமல் எடுக்கப்பட்டுள்ளது. மக்களிடம் வீடு வீடாகச் செல்லாமல் எப்படி கணக்கெடுப்பு நடத்த முடியும்.
சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையானது முஸ்லிம்களை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் எந்த செய்தியை அறிவிக்க முயற்சிக்கிறீர்கள்? இந்த அறிக்கை மதத்தையும் சாதியையும் பிரிக்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது. இந்த சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் லிங்காயத், வொகலிகா மற்றும் தலித் மக்களை முதல்வர் சித்தராமையா ஏமாற்றியுள்ளார்.
இந்த நாங்கள் சாதிவாரி கண்க்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மாநில அரசின் மனநிலையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிரிட்டிஷ் காலத்தில் இருந்த பிரித்தாலும் கொள்கையை காங்கிரஸ் கட்சி கொண்டுள்ளது. இந்த அறிக்கையானது லிங்காயத் மற்றும் வொகாலிகா இடையே மோதல் ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்புக்காக 150 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் தற்போது யாரின் பாக்கெட்டில் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு பெயரில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குழப்பம் நிறைந்ததாகவும் குறைந்த நம்பத்தன்மை கொண்டதாகவும் உள்ளது எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.