குற்றவாளி என நினைத்து நீதிபதியைத் தேடிய போலீஸ்.. ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!
குற்றவாளி என நினைத்து நீதிபதியைத் தேடிய போலீஸ் பற்றிய செய்தி

நீதிமன்ற சம்பவம்

நீதிமன்ற சம்பவம்
நீதிமன்றம் அளித்த சம்மனை தவறுதலாகப் படித்துவிட்டு, குற்றவாளி என நினைத்து நீதிபதி ஒருவரை காவல்துறை துணை ஆய்வாளர் தேடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த திருட்டு வழக்கு ஒன்றில், தலைமறைவாக இருந்த ஆக்ராவைச் சேர்ந்த குற்றவாளி ராஜ்குமாருக்கு எதிராக, பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை நீதிபதி நஜ்மா கான் என்பவர் பிறப்பித்திருந்த நிலையில், குற்றவாளியிடம் சம்மனை அளிக்கும் வேலை காவல்துறை துணை ஆய்வாளர் பன்வாரிலால் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த சம்மனைப் பெற்றுக்கொண்ட பன்வாரிலால், குற்றவாளியின் பெயரை படிக்காமல், நீதிபதியின் பெயரை மட்டும் படித்துவிட்டு, அதுதான் குற்றவாளியின் பெயர் என தவறுதலாக நினைத்துக்கொண்டு அவரைத் தேட ஆரம்பித்துள்ளார்.
ஒருகட்டத்தில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல், நீதிமன்றத்தை நாடிய பன்வாரிலால், மீண்டும் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை வைத்தபோது, அவர் எழுதிக்கொடுத்த அறிக்கையைப் படித்த நீதிபதிக்கு லேசாக தலையே சுற்றியிருக்கும்.
ஏனெனில், குற்றவாளி என்ற இடத்தில் நஜ்மா கான் என சம்மன் பிறப்பிக்க உத்தரவிட்ட தனது பெயரே இருப்பதைப் பார்த்து அதிரச்சி அடைந்து, நடந்த தவறை சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும், காவல்துறை அதிகாரி மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...