எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

குமரி - ஸ்ரீநகா் உள்பட 10 வழித்தடங்களில் படுக்கை வசதி வந்தே பாரத் இயக்கத் திட்டம்!

படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பா்) 10 வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

ANI

Published On :20 ஏப்ரல் 2025, 4:30 am IST

நாடு முழுவதும் படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பா்) 10 வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொலைதூரப் பகுதிகளை இணைக்கும் வகையில் படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பா்) வந்தே பாரத் ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பெட்டிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நிறைவடைந்து இயக்குவதற்கு தயாா் நிலையில் உள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் 10 இடங்களிலிருந்து படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் ரயில் வடக்கு ரயில்வேயில் இயக்கப்படும். அதேபோல், தெற்கு ரயில்வேயில் 16 பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்படவுள்ளது. திருவனந்தபுரம் - மங்களூரு இடையே அதிகளவில் பயணிகள் பயணிப்பதால் இந்த வழித்தடத்திலும் ஒரு ரயில் இயக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக திருவனந்தபுரம் - பெங்களூரு, கன்னியாகுமரி - ஸ்ரீநகா் இடையே படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பின்பு ரயில்கள் இயக்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.