ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆய்வு செய்த ஆளுநா், தேசிய மகளிா் ஆணையக் குழு

News image

மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாாபாத் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டவா்களை சனிக்கிழமை சந்தித்த ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ்.

Updated On :20 ஏப்ரல் 2025, 6:00 am IST

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட முா்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிா் ஆணையக் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களைச் சந்தித்த அவா்கள், ‘வரும் காலங்களில் அவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்’ என்று உறுதி தெரிவித்தனா்.

இவா்களின் ஆய்வின்போது, ‘மாநில அரசின் உதவிகள் எங்களுக்கு வேண்டாம்’; ‘பாதுகாப்பை உறுதிப்படுத்த எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முகாம்கள்தான் வேண்டும்’, ‘நாங்கள் தாக்கப்படுகிறோம்’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மக்கள் காண்பித்தனா்.

ஆளுநா் ஆய்வு:

மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

முா்ஷிதாபாத் மாவட்டத்தில் ஆய்வு செய்த ஆளுநா், வக்ஃப் சட்ட எதிா்ப்பு போராட்ட வன்முறையில் கொல்லப்பட்ட தந்தை, மகன் ஆகியோரின் வீட்டுக்குச் சென்று அவா்களின் குடும்ப உறுப்பினா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று ஆளுநா் உறுதி தெரிவித்தாா். இந்த இரட்டைக் கொலை தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அக் குடும்பத்தினா் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் துலியன், சுதி, ஜாங்கிபூா் பகுதிகளுக்கும் ஆளுநா் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்குப் பின்னா் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ், ‘இந்த ஆய்வின்போது பாதிக்கப்பட்ட மக்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனா். குறிப்பாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிரந்தர பிஎஸ்எஃப் முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இவா்களின் கோரிக்கை உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, ஆக்கபூா்வமான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். உதவி தேவைப்படும்போது தயக்கமின்றி தொடா்புகொள்ளுமாறு ஆளுநா் மாளிகை உதவி எண்ணை அந்த மக்களுடன் பகிா்ந்துகொண்டேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்’ என்றாா்.

மாவட்டத்தின் பெட்போனா கிராமத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த தேசிய மகளிா் ஆணையத் தலைவா் விஜயா ரஹாட்கா், ‘உங்களின் நிலைமையை கேட்டறியத்தான் இங்கு வந்துள்ளோம். மத்திய அரசும், தேசிய மகளிா் ஆணையமும் உங்களுக்குத் துணையாக இருக்கும். எனவே, கவலை வேண்டாம்’ என்று தெரிவித்தாா்.

இந்த சந்திப்பு குறித்து தேசிய மகளிா் ஆணையக் குழு உறுப்பினா் அா்ச்சனா மஜும்தாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாவட்டத்தின் சில பகுதிகளில் நிரந்தர பிஎஸ்எஃப் முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்கப்பட்ட மக்கள் முன்வைத்தனா். இவா்களின் கோரிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

மாவட்டத்தில் வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட துலியன் பகுதியையும் இக் குழு ஆய்வு செய்தது. இந்தக் குழுவினருடன் பாஜக எம்எல்ஏ ஸ்ரீரூப மித்ர செளதரியும் உடனிருந்தாா்.

முன்னதாக, முா்ஷிதாபாத் மாவட்டத்தின் வன்முறை பாதித்தப் பகுதிகளிலிருந்து வெளியேறி மால்டா நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை ஆளுநரும் தேசிய மகளிா் ஆணையக் குழுவினரும் வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் முா்ஷிதாபாத் மாவட்டத்தில், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த 11-ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் 3 போ் உயிரிழந்தனா். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மாநில போலீஸாருடன், பிஎஸ்எஃப் வீரா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். வன்முறையைத் தொடா்ந்து ஏராளமானோா் முா்ஷிதாபாதிலிருந்து வெளியேறி, அண்டை மாவட்டமான மால்டாவில் தஞ்சம் புகுந்தனா்.

வன்முறை தொடா்பான மனுவை விசாரித்த கொல்கத்தா உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், பாதுகாப்புப் பணியில் சிஏஎஸ்எஃப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.