திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஜார்க்கண்டில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் திங்கள்கிழமை கட்டுக்கொல்லப்பட்டனர்.

News image

கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2025, 10:49 pm

ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் திங்கள்கிழமை கட்டுக்கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக மாநில காவல்துறை டிஜிபி அநுராக் குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் கூறியதாவது: பொக்காரோ மாவட்டம் லால்பானியா பகுதியில் சிஆர்பிஎஃப் படை யின் கோப்ரா கமாண்டோ படையினர், மாநில காவல்துறையினர் இணைந்து நக்ஸல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது லுகு குன்றுகளில் இருந்த நக்ஸல்கள், கோப்ரா படையினர் மற்றும் காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட நக்ஸல்களில் விவேக் என்பவர் குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி, அரவிந்த் யாதவ் என்பவர் குறித்து தகவல் அளித்தால் ரூ.25 லட்சம், சாஹேப்ராம் மாஜி என்பவர் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கி, மூன்று ஐஎன்எஸ் ஏஎஸ் துப்பாக்கி. 8 நாட்டுத் துப்பாக்கிகள், கைத் துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது நடைபெற்ற நக்ஸல்கள் என்கவுன்ட்டர் மூலம், பொக்காரோ உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய வடக்கு சோட்டா நாக்பூர் மண்டலத்தில் நக்ஸல்கள் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.