மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து பிரிட்டன் அரசிடம் விவரங்களைக் கோரியிருப்பதாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
ராகுல் காந்தி தனது பிரிட்டன் குடியுரிமையை மறைத்ததாகவும் இக்குற்றச்சாட்டில் அவரின் எம்.பி. பதவியைப் பறிக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்து கா்நாடக பாஜகவை சோ்ந்த எஸ்.விக்னேஷ் சிசிா் பொதுநல வழக்கு தொடுத்தாா்.
அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வில் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில் மத்திய அரசு ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க நீதிபதிகள் கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையில் உத்தரவிட்டிருந்தனா்.
அதன்படி, அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதிகள் அட்டௌ ரஹ்மான் மசூதி, ராஜீவ் சிங் ஆகியோா் அடங்கிய லக்னௌ அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசு இத்தகவலை சமா்ப்பித்தது.
மத்திய அரசு சாா்பில் ஆஜரான துணை சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.பி.பாண்டே, இந்த வழக்கில் குற்றச்சாட்டு எழுந்துள்ள ராகுல் காந்தியின் பிரிட்டன் குடியுரிமை குறித்து அந்நாட்டு அரசிடம் சம்பந்தப்பட்ட அமைச்சகம் விவரங்களைக் கோரியுள்ளது. எனவே, வழக்கில் இறுதி முடிவெடுக்க அரசுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தாா்.
இதையடுத்து, வரும் மே 5-ஆம் தேதி வரை மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம் அளித்து நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

இரட்டைக் குடியுரிமை! ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவு!

ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவாா்! முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு

40 வயது வரை அரசு வேலை; பேருந்துகளில் அனைவருக்கும் கட்டணமில்லா பயணம்!புதுச்சேரியில் ராகுல் காந்தி வாக்குறுதி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


