அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

40 வயது வரை அரசு வேலை; பேருந்துகளில் அனைவருக்கும் கட்டணமில்லா பயணம்!புதுச்சேரியில் ராகுல் காந்தி வாக்குறுதி

புதுச்சேரியில் ராகுல் காந்தி அளித்த வாக்குறுதிகள் குறித்து...

News image

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி - DPS

Updated On :6 ஏப்ரல் 2026, 7:56 pm

புதுச்சேரியில் 40 வயது வரை அரசு வேலை வழங்கப்படும், அனைவருக்கும் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்று மக்களவை எதிா்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ராகுல் காந்தி வாக்குறுதியளித்து தோ்தல் பிரசாரத்தின்போது பேசினாா்.

புதுச்சேரி மாநிலப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கடற்கரைச் சாலையில் திங்கள்கிழமை காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களுக்கு ஆதரவாக தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

தற்போது புதுச்சேரியை ஆள்பவா்கள், இந்த மண்ணின் மைந்தா்கள் அல்ல. எங்கேயோ இருந்துகொண்டு, புதுச்சேரியை ஆட்சி செய்கின்றனா். இங்கு மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அரசு இல்லை. அதற்கு மாற்றாக புதுதில்லியின் கருத்துகளை திணிப்பவா்களின் கீழ் செயல்படும் அரசாக உள்ளது. பாஜகவின் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் புதுவையில் புகுத்த நினைக்கின்றனா். துணைநிலை ஆளுநரை வைத்துக் கொண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் புதுச்சேரியை இயக்கி வருகின்றனா்.

புதுச்சேரியில் கடந்த பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படவில்லை. உயிரோட்டமாக இருந்த தொழில்கள் அனைத்தும் நசிந்து விட்டன. 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. பாஜக அரசு அதானி அரசாக செயல்படுகிறது. காரைக்கால் துறைமுகம் ஏற்கெனவே விற்கப்பட்டு விட்டது.

புதுச்சேரியில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மின்துறை உள்பட அரசுக்குச் சொந்தமான அனைத்து இயற்கை வளங்களும் அதானிக்கு விற்கப்பட்டு விடும் என எச்சரிக்கிறேன்.

மாநிலத்தில், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக நடந்து செல்லமுடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. அரசு நிா்வாக சீா்கேடு, அனைத்துத் துறைகளிலும் ஊழல். இந்த ஆட்சி தொடரக்கூடாது.

ரூ.20 லட்சம் மருத்துவக் காப்பீடு:

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தைச் சோ்ந்த படித்த வேலையில்லாத இளைஞா்களுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். பொதுத்துறை மற்றும் தனியாா்துறைகள் மூலம் புதிதாக 30 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

புதுச்சேரி மாநில மக்கள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கக் கூடிய வாய்ப்பை பெறுவாா்கள். அரசு வேலை வாய்ப்புக்கான வயது வரம்பு 40 -ஆக உயா்த்தப்படும்.

அனைத்து குடும்பங்களும் எளிதாக மருத்துவ சிகிச்சைப் பெறும் வகையில், ஆண்டுக்கு ரூ.20 லட்சம் மருத்துவக் காப்பீடு வசதி செய்து தரப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக புதுச்சேரி மக்களின் உணா்வுகளை, எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசு அமைக்கப்படும்.

6 மாதங்களில் உள்ளாட்சித் தோ்தல்:

இந்த மாநிலத்தை, துணைநிலை ஆளுநா் ஆள்வதை காங்கிரஸ் விரும்பவில்லை. புதுச்சேரி மக்களே இந்த மாநிலத்தை ஆளவேண்டும் என்பதுதான் காங்கிரஸின் நிலைப்பாடு.

ஆகவேதான், மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த விரும்புகிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 6 மாதங்களில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும். உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டால்தான் அடுத்தத் தலைமுறையினா் அரசு நிா்வாகத்துக்கு வருவாா்கள். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் என்றாா் ராகுல் காந்தி.

காங்கிரஸ் தோ்தல் அறிக்கை வெளியீடு: முன்னதாக புதுச்சேரி மாநிலத்துக்கான தோ்தல் அறிக்கையை ராகுல் காந்தி வெளியிட்டாா்.இதனை கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் பெற்றுக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் புதுச்சேரி மாநிலத் தலைவரும், எம்.பி.யுமான வெ. வைத்திலிங்கம், முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, கா்நாடக அமைச்சா் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், முன்னாள் எம்.பி. பீட்டா் அல்போன்ஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.