புதுச்சேரி: புதுச்சேரிக்கு பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, போட்டி காங்கிரஸ் வேட்பாளர்களை சந்தித்துள்ளார்.
இது காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 16, திமுக 13, விசிக ஒரு தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
ஆனால், உடன்பாடு எட்டப்பட்ட பிறகும் கூட்டணியில் உள்ள திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளிலும், விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனுவை திரும்பப் பெறவில்லை.
இந்த நிலையில், ராகுல் காந்தி பங்கேற்ற பொதுக் கூட்ட மேடைக்கு போட்டி வேட்பாளர்கள் 6 பேரும் அழைக்கப்படவில்லை.
ஆனால், போட்டி வேட்பாளர்களான ஷாஜகான், சிவசங்கரன்,குமரன், வேலு, ரகுபதி ஆகிய 5 பேரும் பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்பிய ராகுல் காந்தியை புதுச்சேரி விமான நிலையத்தில் சந்தித்துள்ளனர்.
காரைக்கால் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டி வேட்பாளராக இருக்கும் சக்திவேல் பிரபு மட்டும் இதில் பங்கேற்கவில்லை.
இந்தப் போட்டி வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் இல்லை. அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வெ. வைத்திலிங்கம் கூறியிருந்தார். மேலும், விசிக பொதுச் செயலர் து. ரவிக்குமார் உள்ளிட்ட கட்சியினர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து இதை ஒப்புக்கொண்டும் சென்றனர்.
மேலும், ராகுல் காந்தி பங்கேற்ற பிரசார பொதுக் கூட்டத்திலும் திமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
இந்நிலையில் ராகுல் காந்தியைப் போட்டி காங்கிரஸ் வேட்பாளர்கள் சந்தித்துப் பேசியிருப்பது திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
ஏற்கெனவே எதிர்க் கூட்டணியினர் இக்கூட்டணி குழப்பமான கூட்டணி என்று விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Rahul Meets with Rebel Congress Candidates in Puducherry! DMK Shocked!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று இறுதி? ராகுல் ஆலோசனை!

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏன்?

சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஏன்? ராகுல்!

காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? ராகுல் நாளை ஆலோசனை!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


