
பாகிஸ்தானின் ஜலோக் தோனா என்ற பகுதிக்கு தவறுதலாகச் சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப் பிடித்து வைத்துள்ளதாகவும் அவரை மீட்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கான்ஸ்டபிள் பி.கே. சிங் பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் பாகிஸ்தான் எல்லையில் 182 வது பட்டாலியனில் பணியாற்றி வருகிறார். அவர் வெய்யில் அதிகமாக இருந்ததால், அங்கிருந்த விவசாயிகளுடன் இணைந்து ஓய்வெடுக்க நிழலில் அமருவதற்காக சென்றபோது தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளார். இதைக் கண்காணித்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அவரை உடனடியாக கைது செய்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது முதல்முறை அல்ல என்றாலும், கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜம்மு - காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்தவரான இந்திய பாதுகாப்புப் படை வீரர் பி.கே. சிங்கிடம் இருந்து ரைஃபில்கள், தோட்டாக்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றையும் பாகிஸ்தான் ராணுவத்தினர் பறிமுதல் செய்துள்ளனர். 17 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பி.கே.சிங் என்ற வீரரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: கராச்சியில் நேரு, அயூப் கையெழுத்திட்ட சிந்து நதி உடன்பாடு! நேருவை வரவேற்ற லட்சம் பேர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.