
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சீனா, கனடா உள்ளிட்ட ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று விளக்கமளித்தது.
ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் அதுதொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர், தாக்குதல் தொடர்பாக விளக்கமளித்துள்ளனர்.
தொடர்ந்து பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சீனா, கனடா உள்ளிட்ட ஜி20 நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று விளக்கமளித்தது.
வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தக் கூட்டத்தில் ஜெர்மனி, ஜப்பான், போலந்து, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்டனர்.
பஹல்காம் தாக்குதலும் அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் பிற நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.