இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கேரள தலைநகரிலுள்ள விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரளத்தின் தலைநகரிலுள்ள பல்வேறு விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :26 ஏப்ரல் 2025, 8:58 am

DIN

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள பல்வேறு விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்திலுள்ள பிரபல நட்சத்திர விடுதி உள்பட பல்வேறு விடுதிகளில் ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, இன்று (ஏப்.26) மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த விடுதிகளில் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காததினால், இந்த மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டது.

முன்னதாக, கடந்த சில மாதங்களாக கேரளத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம், உயர் நீதிமன்றம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தன.

பின்னர், அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அவை அனைத்தும் போலியானது என உறுதியானது. இருப்பினும், இந்தச் சோதனைகளினால் அவ்விடங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் தடைப்படுவதும், அங்கு உண்டாகும் பரபரப்பான சூழல்களும், மக்களுக்கான சேவையைகளை வெகுவாக பாதிப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.