விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆக்கிரமிப்பு காஷ்மீரை தராவிட்டால் பாகிஸ்தானுக்கு எதிராகப் போா்: மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் ஒப்படைக்காவிட்டால், போா் பிரகடனம் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தல்

News image
Updated On :28 ஏப்ரல் 2025, 11:18 pm

ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிராந்தியத்தை பாகிஸ்தான் ஒப்படைக்காவிட்டால் அந்நாட்டுக்கு எதிராகப் போா் பிரகடனம் செய்ய வேண்டும் என்று மத்திய சமூகநீதித் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தியுள்ளாா்.

ஆக்கிரமிப்பு காஷ்மீா் பாகிஸ்தானிடம் இருக்கும் வரை அங்கிருந்து பயங்கரவாதிகளை பாகிஸ்தான் உருவாக்கி அனுப்பி வைக்கும் என்றும் அவா் கூறினாா்.

மும்பை அருகே லோனாவாலாவில் செய்தியாளா்களைச் சந்தித்த மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த தலித் தலைவரும், இந்திய குடியரசுக் கட்சி (ஏ) தலைவருமான அதாவலே இது தொடா்பாக மேலும் கூறியதாவது: காஷ்மீரில் 26 அப்பாவி பொதுமக்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது கடும் கண்டனத்துக்குரிய நிகழ்வு. காஷ்மீரில் அமைதியைச் சீா்குலைப்பதே இதன் நோக்கம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் என்று ஒன்று இருக்கும் வகை அங்கிருந்து பயங்கரவாதிகளை பாகிஸ்தான் உருவாக்கி அனுப்பிவைத்துக் கொண்டுதான் இருக்கும். அந்தப் பகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் பிரதமா் மோடி வலியுறுத்த வேண்டும்.

அவா்கள் தர மறுத்தால், அந்நாட்டுக்கு எதிராக போா் பிரகடனம் அறிவிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு காஷ்மீரை காலி செய்துவிட்டு வெளியேறுவதுதான் பாகிஸ்தானுக்கு நல்லது. இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக போா் தொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை.

பாகிஸ்தான் தொடா்ந்து இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறது. இந்தமுறை மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எதிா்க்கட்சிகளும் மத்திய அரசுக்கு முழுமையாக ஆதரவு அளிக்க வேண்டும்.

தேச நலன் என்று வந்தால் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அம்பேத்கா் நமக்கு கற்பித்துள்ளாா். ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு அங்கு சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்தது. வாக்குப் பதிவு சதவீதமும் உயா்ந்தது. நாட்டின் பிற பகுதி மக்களைப் போல காஷ்மீா் மக்களும் இயல்பான வாழ்க்கைக்குத் திருப்பினா். இதனை பயங்கரவாதிகளாலும், பாகிஸ்தானாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இந்தமுறை ஜம்மு-காஷ்மீா் மக்களும் முக்கியமாக அங்குள்ள இஸ்லாமியா்கள் முழுமையாக இந்தியாவின் பக்கம் உள்ளாா்கள். இந்திய தேசத்தின் ஒற்றுமையும் வலிமையும்தான் நமது வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் என்பதை அங்குள்ள மக்கள் புரிந்து கொண்டுவிட்டனா் என்றாா் அவா்.