சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கோடி கொள்ளை
பிரதிப் படம்
பிரதிப் படம்ENS
Published on
Updated on
1 min read

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக தில்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடந்தவண்ணம் இருந்து வருகிறது. இதனைத் தவிர்க்க சைபர் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், குற்றங்களும் அதனால் இழப்புகளும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

இந்த நிலையில், சைபர் குற்றங்கள் குறித்து தில்லியில் ஆய்வு நடத்தப்பட்டது. கடந்தாண்டில் மட்டும் சைபர் மற்றும் மோசடி குற்றங்களால் ரூ. 22,842 கோடியை இந்தியர்கள் இழந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. இது 2023-ல் நிகழ்த்தப்பட்ட ரூ. 7,465 கோடியைவிட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும்; 2022-ல் ரூ. 2,306 கோடியைவிட 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, நடப்பாண்டில் ரூ. 1.2 லட்சம் கோடிக்குமேல் இந்தியர்கள் இழப்பர் என்றும் கணித்துள்ளனர்.

2023-ல் சுமார் 15.6 லட்சமாக இருந்த சைபர் குற்றம் தொடர்பான புகார்கள், 2024-ல் 20 லட்சமாக அதிகரித்துள்ளது.

2024, ஜனவரி மாதத்தில் மட்டும் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் தளங்கள் தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட சைபர் புகார்களின் எண்ணிக்கை 15,000. அதற்கு அடுத்த மாதமான பிப்ரவரியில் 14,000 மற்றும் மார்ச்சில் 15,000 புகார்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

Summary

Digital Fraud, Cybercriminals Stole Rs 23,000 Crore From Indians In 2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com