இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

அமர்நாத் யாத்திரை திட்டமிடப்பட்ட ஒருவாரத்துக்கு முன்பே நிறுத்தம்! என்ன காரணம்?

News image

அமர்நாத் யாத்திரை - PTI

Updated On :2 ஆகஸ்ட் 2025, 5:05 pm IST

ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்திரை திட்டமிடப்பட்ட ஒருவாரத்துக்கு முன்பே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரை செல்ல ரக்‌ஷா பந்தன் நாளான ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த யாத்திரை முன்கூட்டியே முடிவடைகிறது.

காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளதன்படி, நாளைமுதல்(ஆக. 3) அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காஷ்மீர் கோட்ட ஆணையர் விஜய் குமார் பிதூரி இன்று(ஆக. 2) வெளியிட்டுள்ள அறிக்கையில்:

அண்மையில் பெய்துள்ள கனமழையால் மோசமான வானிலை நிலவுவதாகவும், இதனால் யாத்திரை பாதைகள் சேதமடைந்திருப்பதாகவும் அங்கு பராமரிப்பு பணிகள் மேர்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரைக்கு வரையறுக்கப்பட்டுள்ள பால்டல், பஹல்காம் ஆகிய இரு வழித்தடங்களிலும் ஆக. 3 முதல் அதிக பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் உதவியுடன் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் இரு வழித்தடங்களிலும் அமர்நாத் யாத்திரை செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The annual Amarnath Yatra in Kashmir closed a week before it was to end.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.